உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும்?
விடை காண முனைந்தேன்.
விளைவாய் கவிதை புனைந்தேன்...
அடிவானத்தை தொட எவ்வளவு
அடிவைக்க வேண்டுமோ அவ்வளவு ...
அம்புலியில் இறங்க எவ்வளவு
ஆகாயத்தில் பறக்கவேண்டுமோ அவ்வளவு...
அண்டத்திற்கு எல்லைகாண எவ்வளவு
அப்யாசம் செயவேண்டுமோ அவ்வளவு ...
ஆம்... அவ்வளவு பிடிக்கும்.
- பி.ஸ்வர்ண லக்ஷ்மி
No comments:
Post a Comment