அந்திக்கு முன்பன முன்மாலை நேரம்
வழக்கிற்கு மாறான வானின் நிறம்
ஒளி நேரத்தில் இருள் சூழ்ந்தது
இருளுடன் கூடி மழையும் பொழிந்தது
மேக மிரங்கி பூமி குளிர்ந்தபின்
தெளிந்த வானத்தில் மஞ்சள் சூரியன்
அந்தியின் எல்லை சற்றே நீண்டு
தீப்பிடித்தது.... தீ பிடித்தது
கதிர்கள் கரம் குவித்து இழுத்து
வீட்டின் மூன்றாம் கட்டிற்கு அழைத்தது
அண்ணாந்து பார்த்தல் அழகு வர்ணங்கள்...
ஐந்து பூதமும் ஒன்றன் பிடியில்
வானின் ஒருபாதி மஞ்சள் இறைத்திருக்க...
மறுபாதி அடர் நீலம் கரைத்திருக்க...
தூரத்தில் தெரிந்த வெளிர் நீலம்
மஞ்சளுடன் நீலம் ஒருமித்த சாம்பல்
சிகப்புடன் நீலம் இணைந்த ஊதா
அத்தனையும் காண கண்கள் போதா
உற்று கவனித்து சற்றே பார்த்தல்
வெளிர் நீலத்தில் கடலொன்று தெரிய ...
கடலுக்கு நடுவே மேகத் தீவுகள்.
கடலை... தீவா... மேகமா... வானமா...
ஏதுவென் ரறியா முடியா ஒன்று
தீப்பற்றி எரிந்தது...
தீயை அணைக்க காற்று எத்தனிக்க
தூரலும் மேகமும் தழல் தணிக்க
த்வந்த யுத்தம் வான வெளியில்
தீயை மெல்ல மேகம் விழுங்க
ஒன்றிற் குள்ளே ஐம் பூதங்களும் ?!?!?!
ஒன்று ஒன்றிற் குள்ளே ஐந்து
ஆராய்ந்தால் வெவ்வேறாய் தெரியும்
அறியவும் செய்தால் ஒன்றென்று புரியும்.